பிரதான செய்திகள்
விடுதலைப் புலிகளின் நிர்வாகத் தலைநகராக விளங்கி வந்த கிளிநொச்சியில் விரைவில் மீண்டும் தமிழர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என்று இலங்கை அரசு அதிகாரி எமல்டா சுகுமார் தெரிவித்தார்.
விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த 12 பேர் இந்தியாவுக்குள் ஊடுறுவியுள்ளனராம். இவர்கள் 3 குழுக்களாகப் பிரிந்த ஆந்திர காடுகளுக்குள் புகுந்துள்ளனராம். மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுக்கு இவர்கள் பயிற்சி அளிக்கின்றனராம். இந்திய உளவுப் பிரிவு இந்தத் தகவலை கூறியுள்ளது.
ஏனைய செய்திகள்
2009-ம் ஆண்டு மே 19-ம் தேதி விடுதலைப் புலிகளை முற்றிலுமாக முறியடித்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. போரின் இறுதி மூன்று நாள்களில் ஏறத்தாழ 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள்.
ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் விதிகள் ஏதும் மீறப்படவில்லை. இந்த விவகாரத்தில் ஜெயலலிதா, பாஜகவிடம் இருந்து நான் சர்டிபிகேட்டை எதிர்பார்க்கவில்லை என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசா கூறினார்.
சில வாரங்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இருந்து பெட்ரோல், டீசல் விலை பெட்ரோல் லிட்டருக்கு 7 காசும், டீசல் லிட்டருக்கு 4 காசுமாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இலங்கைத் தமிழர்களின் தனி ஈழப் போராட்டம் தொடரும். அவர்களுக்கு தனி நாடு கிடைத்தே தீரும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸில் இன்று 410 புள்ளிகள் வரை குறைந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தைச் சநதித்தார்கள். கடந்த வாரம் பங்குச் சந்தை தொடர்ந்து சரிவுக்குள்ளானதால் கிட்டத்தட்ட ரூ 66000 கோடி வரை பெரிய நிறுவனங்களின் பங்குகள் இழப்பைச் சந்தித்தன.
கொழும்பு: இலங்கை வட பகுதியில் அரசு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழர்களில் 90 ஆயிரம் பேர் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு நேற்று தகவல் வெளியிட்டுள்ளது. ஆனால் இதனை தமிழர் அமைப்புகள் உறுதிப்படுத்த மறுக்கின்றன.
ஒரிஸ்ஸாவுக்குச் சென்று கொண்டிருந்த டெல்லி-புவனேஸ்வர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலை கடத்திய நக்ஸல்களும், அவர்களது ஆதரவாளர்களான பழங்குடியினரும் ரயிலை 5 மணி நேரத்துக்குப் பின் விடுவித்தனர்.
சென்னை: திருத்துறைப்பூண்டி கோயிலில் கொள்ளையடிக்கப்பட்ட சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள பழைமையான மரகதலிங்கம் மீட்கப்பட்டது. இதை விற்க முயன்ற இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் கருணாநிதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை சந்திக்கின்றனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தலித்- பழங்குடி மக்களின் உரிமைப் பேரணி மற்றும் கூட்டம் சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இலங்கையில் முகாம்களில் உள்ள தமிழர்கள் விடுவிக்கப்பட்டு வருவதாக அதிபர் ராஜபட்ச பொய்யானத் தகவல்களைக் கூறிவருகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலர் தா.பாண்டியன் குற்றஞ்சாட்டினார்.
வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009 SunNews Tamil
Suntv-News - 11/13/2009 SunNews Tamil
TamilTv news - 11/12/2009 SunNews Tamil
EveningNews - 11/11/2009
SunNews Tamil
Tamilnews - 11/17/2009 SunNews Tamil
Suntv-News - 11/13/2009 SunNews Tamil
TamilTv news - 11/12/2009 SunNews Tamil
EveningNews - 11/11/2009
More Video News >>
சிறப்புச் செய்திகள்
இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் 20000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக, த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்று திருப்பமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கைபோர் நிறுத்தம் 232 வாக்குகள் பெற்று நிறைவேறியது.
இன்று வரலாற்று திருப்பமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கைபோர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 358 வாக்குகளைக் கொண்ட நடாளுமன்றத்தில் 232 வாக்குகள் பெற்று இலங்கையில் எந்த ஒரு நிபந்தனையும் அற்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு போர் நிறுத்தம் உடனடியாக செயல் படுத்தவேண்டும் என நிறைவேறியது.
இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி என்று குற்றம்சாற்றியுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்றும் கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்து வாழும் மக்களை பார்வையிட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.

