சுவிஸ் செய்திகள்

ஆஸ்லோ: தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முக்கிய நடவடிக்கையான நாடு கடந்த தமிழீழ அரசு ஜெனீவா நகரில் நிறுவப்படவுள்ளது. சர்வதேச நகர் என்பதால் ஜெனீவாவில் தமிழீழ அரசை நிறுவ புலிகள் அமைப்பு தீர்மானித்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்தியர்களின் ரூ.70 லட்சம் கோடி கறுப்பு பணம் சுவிஸ் வங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. இதுகுறித்து எந்த உண்மையுமே எங்களுக்குத் தெரியாது என சுவிஸ் வங்கி மற்றும் அதன் தொடர்பில் உள்ள வங்கிகள் அறிவித்துள்ளன.

ஐக்கியராட்சிய செய்திகள்

போரினால் இடம்பெயர்ந்த மக்களில் 11,000 பேர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என இனங்காணப்பட்டு தனியான முகாம்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், இவ்வாறு இவர்கள் இனங்காணப்பட்ட முறை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என பிரித்தானியா கவலை தெரிவித்திருக்கின்றது.

சிறிலங்கா அரசின் நியாயமற்ற ஏற்றுக்கொள்ள முடியாத நடத்தைக்கு எதிராக உதவி வழங்கும் நாடுகளும் உதவி அமைப்புக்களும் ஓரே அணியில் திரண்டு நிற்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என பிரித்தானியாவின் புகழ்மிக்கதும் செல்வாக்குமிக்கதுமான நாளேடான 'த கார்டியன்' தெரிவித்துள்ளது.

கனடிய செய்திகள்

இலங்கையின் தற்போதைய மனிதாபிமான நிலவரத்தை கருத்தில்கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கான குடிவரவு நடவடிக்கையை கனடா தற்போது துரிதப்படுத்த தொடங்கியிருக்கின்றது. அனுசரணை வழங்குபவர்கள் திணைக்களத்துக்கு அறிவித்தால் கனடிய குடிவரவு குடியுரிமை திணைக்களம் தற்போதுள்ள குடும்ப மட்ட விண்ணப்பங்களை துரிதப்படுத்தும்.

வானூர்தி நிலையத்தில் பொப் றே தடுத்துவைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டது தொடர்பாக சிறிலங்கா அரசாங்கத்துக்கு நாம் எமது அதிருப்திகளை தெரிவித்துக் கொள்கின்றோம். கனடா நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரை சிறிலங்கா அரசாங்கம் நடத்திய விதம் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று - கனடாவின் வெளிவிவகாரத்துறையின் பேச்சாளர் எமா வெல்போட்

பிரஞ்சு செய்திகள்

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் அரையிறுதிக்கு சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினார். பெண்கள் பிரிவில் ரஷ்யாவின் கஸ்னெட்சோவா, அமெரிக்காவின் செரினா வில்லியம்சை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.

விபத்துக்குள்ளான ஏர் பிரான்ஸ் விமானத்தின் பாகங்கள் பிரேசிலுக்கு 650 கி.மீ. வட கிழக்கே அட்லாண்டிக் கடலில் கிடப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பகுதியில் பிரான்ஸ், பிரேசில் விமானப் படையினரும் கடற்படையினரும் நடத்திய தேடுதல் வேட்டையில் பயணிகள் யாரும் உயிர் தப்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

ஜேர்மன் செய்திகள்

தமிழ் மக்கள் சந்தித்து வரும் மாபெரும் அவலநிலையை வெளியுலகத்துக்கு கொண்டு வரவும், சிறிலங்கா அரசின் தமிழ் மக்கள் மீதான தொடர்ச்சியான இனப் படுகொலையைக் கண்டித்தும் பேர்லின் மாநிலத்தில் திடீர் போராட்டம்.

கிரி மற்றும் ராகுல் ஆகியோரால் ஆரம்பிக்கப்பட்ட பட்டினிப்போராட்டம் இன்றுடன் பதின்மூன்றாவது நாளை நிறைவுசெய்கிறது, இன்று காலை முதல் மக்கள் பலர் ராகுல் மற்றும் கிரி ஆகியோருடன் உரையாடிக்கொண்டிருந்தனர், மாலை கடுமையான மழை பெய்துகொண்டிருந்த போதும் மக்கள் திரண்டுவந்து கவனயீர்ப்பில் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூர் செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெறும் உலகக் கோப்பை ஆடவர் ஜுனியர் ஹாக்கி போட்டிகளில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் இந்தியா, பெல்ஜியத்தை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றது. தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இந்தியா இடம்பெற்றுள்ள பிரிவில் ஆறு புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று அதிகாலை தொடக்கம் நடத்திய அகோர எறிகணை மற்றும் துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 102 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 27 சிறுவர்கள் உட்பட 140 பேர் காயமடைந்துள்ளனர்.

வீடீயோ செய்திகள்
Last posted Videos
SunNews Tamil
Tamilnews - 11/17/2009
SunNews Tamil
Suntv-News - 11/13/2009
SunNews Tamil
TamilTv news - 11/12/2009
SunNews Tamil
EveningNews - 11/11/2009

More Video News >>


சிறப்புச் செய்திகள்

இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்ட யுத்தத்தில் முல்லைத்தீவு கடற்கரைப் பகுதியில் 20000 தமிழ் மக்கள் இனப்படுகொலை செய்திருப்பதாக, த டைம்ஸ் குற்றம் சுமத்தியுள்ளது. அரசாங்கம் மேற்கொண்ட எறிகணை வீச்சுக்களால் அவர்கள் கொல்லப்பட்டதாக, த டைம்ஸ் மேற்கொண்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அறிவிக்கப்பட்டதை விட, மூன்று மடங்கு அதிகம் என டைம்ஸ் தெரிவித்துள்ளது.


இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் குறிப்பிட்டுள்ளார்.


இன்று வரலாற்று திருப்பமாக ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இலங்கைபோர் நிறுத்தம் தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 358 வாக்குகளைக் கொண்ட நடாளுமன்றத்தில் 232 வாக்குகள் பெற்று இலங்கையில் எந்த ஒரு நிபந்தனையும் அற்ற மக்கள் பாதுகாப்பாக வெளியேற ஒரு போர் நிறுத்தம் உடனடியாக செயல் படுத்தவேண்டும் என நிறைவேறியது.


இலங்கைத் தமிழர்கள் பிரச்சனையையே நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு, "அனைத்துக் கட்சிக் கூட்டம்'; "நாடாளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமா கடிதங்களை பெறுதல்'; "ராஜினாமா கடிதங்களை கிழித்து போடுதல்'; "மனித சங்கிலி போராட்டம் என பள்ளிக் குழந்தைகள் உட்பட அனைவரையும் மழையில் நிற்க வைத்து தந்தையும், மகனும் வாகனத்தில் பவனி வருதல்'; "பிரதமருக்கு தந்தி'; "இறுதி வேண்டுகோள் என்ற தலைப்பில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்', என பல்வேறு சிரிப்பு நாடகங்களை அரங்கேற்றி, இலங்கைத் தமிழர்களுடைய அழிவிற்கும், துன்பத்திற்கும், துயரத்திற்கும், இன்னலுக்கும் காரணமாகியுள்ள கருணாநிதி எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலர் ஜெயலலிதா, துரோகி தூக்கி எறியப்படும் நாள் வெகு தூரத்தில் இல்லை எ‌ன்று‌ம் கூறியுள்ளா‌ர்.


இடம்பெயர்ந்து வாழும் மக்களை பார்வையிட தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதென கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார்.


Search
:

© The Service rights to www.kunrinkural.com